Search This Blog

Saturday, July 09, 2011

காதலிக்கிறீங்களா, இத பாருங்க ;)

கடலை காதல் கல்யாணம்
என்றனைத்தும்
மோனையில் கூட கனவுகளோடு
முழுதாய் ஆமோதிக்க
விரக்தியை மட்டுமே
விடையாய் தரும்
வாழ்க்கையின் நிஜங்கள் ! ! !

நீ . . . நான். . .

கற்றைத் தீப்பிழம்பாய்
இருந்த என்னை
மழைமேகத் துளியாய்
மாற்றிய
ஒற்றைப் பார்வைக்குச்
சொந்தக்காரி நீ ! ! !

குச்சி மிட்டாய் ! ! !

கடும் மழையிலும்
கத்திரி வெயிலிலும்
நேரம் நான்கெனக் கூவும்
மணியோசைக்காக
பள்ளிகூட வாசலில்
காத்திருக்கும் துயரம் அறிந்தவன்
குச்சி மிட்டாய்காரன் ! ! !

குச்சி மிட்டாய் ! ! !

கடும் மழையிலும்
கத்திரி வெயிலிலும்
நேரம் நான்கெனக் கூவும்
மணியோசைக்காக
பள்ளிகூட வாசலில்
காத்திருக்கும் துயரம் அறிந்தவன்
குச்சி மிட்டாய்காரன் ! ! !

Friday, July 08, 2011

எரிகிறது வாழ்க்கை இங்கே!!!

முன்பின்னென
பொழுதுகள் கரைந்து கிழிந்துகொண்டிருக்க
மெல்லிய ஜவ்வாய்
மனப்படலங்கள் கிழிந்துகொண்டிருக்க
எலும்பை எரித்து உயிரை உருக்கி
குளிர்காயும் இவனை கொண்டுசெல்ல
எமன் வரும் நாளை
எதிர்நோக்கி எதிர்நோக்கி
காத்திருப்பதிலே
கழிகிறது என் நாட்கள். . .
படலங்கள் பிரியுமுன் வராவிடில்
மரணம் என்னை அணைத்திருக்கும். . .
எங்கனம் நோக்கினும்
வேண்டுவதோர் விடுதலையே ! ! !

மௌனங்கள் கூட ஒலிக்கும்

திரும்பி ஒருமுறை பார்க்க இயலாமல்
நீ நகர்ந்து செல்லும் நேரங்களில்
பிரிவின் ரணம் தாங்க மாட்டாமல்
உனதன்பை மனம் உணரும் தருணங்களில்
முதல் முத்த ஸ்பரிசங்களால்
நகராமல் நின்ற இரவுப்பொழுது
மனதை மழுங்கச் செய்துவிடுகிறது. . .
உயிரின் வீரியம் காற்றில் கரைந்து
தொடரும் முற்று புள்ளி நிலவுகளாய்
விழி நீர்துளியாய் தெறித்து நிற்க
காத்திருப்பின்  கனம்  கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை மெதுவாய் உணர்வாய் நீ ! ! !
காத்திருப்பின் கனம் கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை  மெதுவாய்  உணர்வாய் நீ ! ! !

பிரதானமாய் காற்று

உன்  காதல்
அழைத்து  செல்லும்  பாதையில்
அவ்வப்போது  காணாமல்  நான்  போக
எதிர் காற்றில்
தலைகவிழும்  குடை போல
தாங்க  மாட்டாமல்
மயங்குகிறது  மனது...
அணைத்துக்  கொள்ள ஆளில்லாமல்
காதலால் நீ கரைய
கொட்டி தீர்க்க வழியில்லாமல்
மெல்ல மெல்ல - என்
காதலின்  வீரியம்   உறைய
அங்கிங்கெனாதபடி
எங்கும்   நிறைந்திருக்கும்    காற்றில்
பிரதானமாய்  கலக்கும்   நம்  காதல் ! ! !  

மரணமில்லா உலகம் வேண்டும்

மரணத்தின் விழுதுகளை
மௌனம் மட்டுமே
ஆழமாய் கவ்விக்கொண்டிருக்கிறது..
மறுஜனனம் வேண்டி நிற்கும் வேளையில்
நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல
இறைவனின் இருப்பையே
கேள்வி குறியாக்கும்
உயிர் குதறும் பிரிவின் ரணம்..
உறவுகள் நிரந்தரமாய் நீங்கி செல்கையில்
நீத்தார் இல்ல உலகில்
நிதர்சன வாழ்க்கை நாம் வாழ
இழப்புகள் ஏற்றுகொள்ளும் திராணியற்ற எங்களுக்காக
மரணம் அழிக்கும் சூனியங்கள் தேவை !!!

Sunday, July 03, 2011

munnaal dhevathaiyum, nanbargalum

தேவதைகளோடு 
முன்னொரு  நாள்  மாலை 
முற்றத்தில்  விளையாடிகொண்டிருகையில்
கீழே  விழுந்து 
உறைப்பினால்  இரத்தம்  பீறிட - அழுகையை 
காண  சகிக்காமல் 
கடவுளுக்கு சொல்லி  அனுப்பினாள்  ஓர்  தேவதை ...
காயமாற்றவோ  அனுப்பி வைத்தார் 
கடவுள்   நண்பர்களை !!!
அவளுக்கெப்படி   தெரியும்   உங்களை பற்றி ???
இப்பொழுதேல்லாம்   
பொழுது   போக்க   ஆளில்லாமல் 
கடவுளை  சபித்துக்  கொண்டிருக்கிறாள் 
முன்னாள்    தேவதை !!!