Search This Blog

Thursday, October 20, 2011

ஒரு மொக்க கவித !!

நண்பர்களில்லாத கல்லூரிப் பேருந்து பயணமென்பது
நடு சாம மழை போல
இருட்டின் இன்னல்களுக்கு அப்பாற்பட்ட இன்பமது !!!
அப்படி ஓர் நாள்
தன்னந்தனியாய் பின்னிருக்கையில் அமர்ந்து
விலாசமில்லா   பேருந்துப்  பிரஜைகளை
ஆராய முற்பட்டதின் விளைவிது !!
                                    - ஓர் மொக்க கவிதை

ஒவ்வோர்  இருக்கையின் ஆக்ரமிப்புகள் பின்வருமாறு :
நண்பனோடு   அளவளாவிக்  கொண்டு
குழந்தைபோல்   சிரிக்கும்   ரெட் ஷர்ட் ஜுனியர்..
க்யூட் என  சொல்லும் மனசு,
எதிர் இருக்கையில் அவன் சைட் அடிக்கும் பெண்ணைப் பார்த்ததும்
சட்டென  சறுக்கும் ;)
தனியாய் சிரிக்கும் ஒருத்தி..
பேருந்து  கம்பியில்  தலைசாய்த்து  உறங்கும்  ஒருவன்..
கைபேசி குறுஞ்செய்தி உலகத்தின்
அனிச்சை   சந்தோஷத்தில்   லயித்து இருக்கும்  ஒருவனும்  ஒருத்தியும் ..
சுற்றுமுற்றும்  நடப்பது  அறியாமல் - காதில்
இசையோடு பயணிக்கும் ஒருவன் ..
மூன்று பேராய் கூடி
நான்காவதாய்  ஓர்  காதல்ஜோடியைப்  பற்றி
புரணிப் பேசும்  பக்கத்து  இருக்கை பெண்கள் ..
காலியாய் பல இடம் இருந்தும்
அரசல் புரசல் மற்றும் அலப்பறைகளோடு
இருவர்  இருக்கையில்
நால்வராய் பயணிக்கும்
இளமைப்  பட்டாள  இனிமைகள் ..
முன்பின்  இருக்கைகளில்  அமர்ந்து
கடலை போடும் சில மொக்கபீஸ்கள் ..
மறுநாள்   இண்டெர்னல் தேர்வுக்கான
ஆயத்தம் தொடங்கும் அதிமேதாவி ..
தப்பிக்க வழியின்றி
கண்டக்டரிடம்  கதை பேசிக் கொண்டிருக்கும் அப்பாவி ..
இத்தனைக்கும் நடுவில் - என்றும்
கூட பயணிக்கும் குரங்குக் கூட்டம் இன்றில்லாமல் போக
கல்லூரி பேருந்தின்
அன்றாட  பயணம் கூட அந்நியமாகி நிற்க
நெடுந்தூரம் தாண்டி வந்தபின்
புதிதாய் முளைத்த வேகத்தடையில்
பேருந்து துள்ளிக் குதிக்க
முன்னிருந்த  கம்பியில் முட்டி
தடுமாறி  நான் விழ
அனைவரும் திரும்பி பார்த்து சிரித்ததில்
அன்றைய  கவிதை  மற்றும் பேருந்தின்
கதாநாயகி ஆகிப் போனேன் நான் !!!

Saturday, July 09, 2011

காதலிக்கிறீங்களா, இத பாருங்க ;)

கடலை காதல் கல்யாணம்
என்றனைத்தும்
மோனையில் கூட கனவுகளோடு
முழுதாய் ஆமோதிக்க
விரக்தியை மட்டுமே
விடையாய் தரும்
வாழ்க்கையின் நிஜங்கள் ! ! !

நீ . . . நான். . .

கற்றைத் தீப்பிழம்பாய்
இருந்த என்னை
மழைமேகத் துளியாய்
மாற்றிய
ஒற்றைப் பார்வைக்குச்
சொந்தக்காரி நீ ! ! !

குச்சி மிட்டாய் ! ! !

கடும் மழையிலும்
கத்திரி வெயிலிலும்
நேரம் நான்கெனக் கூவும்
மணியோசைக்காக
பள்ளிகூட வாசலில்
காத்திருக்கும் துயரம் அறிந்தவன்
குச்சி மிட்டாய்காரன் ! ! !

குச்சி மிட்டாய் ! ! !

கடும் மழையிலும்
கத்திரி வெயிலிலும்
நேரம் நான்கெனக் கூவும்
மணியோசைக்காக
பள்ளிகூட வாசலில்
காத்திருக்கும் துயரம் அறிந்தவன்
குச்சி மிட்டாய்காரன் ! ! !

Friday, July 08, 2011

எரிகிறது வாழ்க்கை இங்கே!!!

முன்பின்னென
பொழுதுகள் கரைந்து கிழிந்துகொண்டிருக்க
மெல்லிய ஜவ்வாய்
மனப்படலங்கள் கிழிந்துகொண்டிருக்க
எலும்பை எரித்து உயிரை உருக்கி
குளிர்காயும் இவனை கொண்டுசெல்ல
எமன் வரும் நாளை
எதிர்நோக்கி எதிர்நோக்கி
காத்திருப்பதிலே
கழிகிறது என் நாட்கள். . .
படலங்கள் பிரியுமுன் வராவிடில்
மரணம் என்னை அணைத்திருக்கும். . .
எங்கனம் நோக்கினும்
வேண்டுவதோர் விடுதலையே ! ! !

மௌனங்கள் கூட ஒலிக்கும்

திரும்பி ஒருமுறை பார்க்க இயலாமல்
நீ நகர்ந்து செல்லும் நேரங்களில்
பிரிவின் ரணம் தாங்க மாட்டாமல்
உனதன்பை மனம் உணரும் தருணங்களில்
முதல் முத்த ஸ்பரிசங்களால்
நகராமல் நின்ற இரவுப்பொழுது
மனதை மழுங்கச் செய்துவிடுகிறது. . .
உயிரின் வீரியம் காற்றில் கரைந்து
தொடரும் முற்று புள்ளி நிலவுகளாய்
விழி நீர்துளியாய் தெறித்து நிற்க
காத்திருப்பின்  கனம்  கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை மெதுவாய் உணர்வாய் நீ ! ! !
காத்திருப்பின் கனம் கூடாமல்
பார்த்துகொள்ளும்படி பதறும் - என்
மௌனங்களை  மெதுவாய்  உணர்வாய் நீ ! ! !

பிரதானமாய் காற்று

உன்  காதல்
அழைத்து  செல்லும்  பாதையில்
அவ்வப்போது  காணாமல்  நான்  போக
எதிர் காற்றில்
தலைகவிழும்  குடை போல
தாங்க  மாட்டாமல்
மயங்குகிறது  மனது...
அணைத்துக்  கொள்ள ஆளில்லாமல்
காதலால் நீ கரைய
கொட்டி தீர்க்க வழியில்லாமல்
மெல்ல மெல்ல - என்
காதலின்  வீரியம்   உறைய
அங்கிங்கெனாதபடி
எங்கும்   நிறைந்திருக்கும்    காற்றில்
பிரதானமாய்  கலக்கும்   நம்  காதல் ! ! !  

மரணமில்லா உலகம் வேண்டும்

மரணத்தின் விழுதுகளை
மௌனம் மட்டுமே
ஆழமாய் கவ்விக்கொண்டிருக்கிறது..
மறுஜனனம் வேண்டி நிற்கும் வேளையில்
நாட்கள் நகர்ந்து செல்ல செல்ல
இறைவனின் இருப்பையே
கேள்வி குறியாக்கும்
உயிர் குதறும் பிரிவின் ரணம்..
உறவுகள் நிரந்தரமாய் நீங்கி செல்கையில்
நீத்தார் இல்ல உலகில்
நிதர்சன வாழ்க்கை நாம் வாழ
இழப்புகள் ஏற்றுகொள்ளும் திராணியற்ற எங்களுக்காக
மரணம் அழிக்கும் சூனியங்கள் தேவை !!!

Sunday, July 03, 2011

munnaal dhevathaiyum, nanbargalum

தேவதைகளோடு 
முன்னொரு  நாள்  மாலை 
முற்றத்தில்  விளையாடிகொண்டிருகையில்
கீழே  விழுந்து 
உறைப்பினால்  இரத்தம்  பீறிட - அழுகையை 
காண  சகிக்காமல் 
கடவுளுக்கு சொல்லி  அனுப்பினாள்  ஓர்  தேவதை ...
காயமாற்றவோ  அனுப்பி வைத்தார் 
கடவுள்   நண்பர்களை !!!
அவளுக்கெப்படி   தெரியும்   உங்களை பற்றி ???
இப்பொழுதேல்லாம்   
பொழுது   போக்க   ஆளில்லாமல் 
கடவுளை  சபித்துக்  கொண்டிருக்கிறாள் 
முன்னாள்    தேவதை !!!





Sunday, May 22, 2011

To My Friend..

Sumtyms u're d worst of frnz
Sumtyms u're da best.
To wateva trials i've tried
ua frndship comes out best.
Ua foolish demands irritate
Ua stupid suggestions appeals
BUT...
I hate yo, I luv yo or juz tolerate yo
I cant decide..
Wateva be ua many faults
their extent i cant think
All i can say dat, good or bad,
We're still frnz, the best foreva!!!

Sunday, April 03, 2011

perunthu payanam

பேருந்துப்   பயணங்களின்  போது
முகத்தில்  அறையும் 
குளிர் காற்றின்
மௌன மொழியில்
உன் குரல் கலந்து
வரக்கூடும்  என்றெண்ணியே  
ஜன்னலோர இருக்கையில்
அமர்ந்திருக்கிறேன் நான் !!!

Wednesday, March 30, 2011

kai kollakaadhal

நிராகரிப்பின் நிதர்சனங்களை
உணரும் சமயங்களில் கூட
உன் காதலை எண்ணி
என்னை மறுதலிக்கும் என் மனது!!!

kavithaiyum kaadhalum

கவிதையைப் பொழியுமுன்
வார்த்தைகள்  அனைத்தும் 
கவிதை  என்கிறாய்  நீ!!
வார்த்தைகளில்  வழியும்  கவிதையே 
காதல் என்கிறேன் நான் !!
மொத்தத்தில் 
கவிதையும்   காதலும் 
என்   ஏட்டினில் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறது !!! 

Friday, March 25, 2011

kanavu karaisal

நிறமற்ற கவலைகளுக்கு
கவிதை சாயம் பூசுகையில்
வெறுமனே வெறித்துக்கொண்டிருக்கும் 
நடுசாம வேளைகளோடு
கனவுகள் பின்னிகொள்ள
கற்றுணர்ந்த நிகழ்வுகளை
வெள்ளையாய் ஓர் விட்டுகொடுத்தலில்
கேட்பாரற்ற மகிழ்ச்சி  பகிர்தலில்
எதிர்பார்ப்பில்லா ஆச்சர்யங்களில்
மனம் கரையும் அதிர்வுகளில்
உண்மையாய் உணரும்போது
கனவுகள் ரொம்பவும் பிடித்து போகிறது
கவிதைகளை விடவும் !!!

minsaaramilla iravu

மின்சாரமில்லா மழை நேர இரவில்
மௌனங்கள் ஓங்கி ஒலித்துகொண்டிருக்க
அரவமில்லா இருட்டில்
மரணங்களின் சாயப் பூச்சு
மங்கலாய் அலறிகொண்டிருக்கும்..
காற்றில் அலையும் ஆன்மாக்களோ , ஆவிகளோ 
அழைக்கும் சத்தம் கேட்குமென
 வாய் பொத்தி மூச்சடக்கி காத்திருப்பான் 
மனித உலகம் வெறுத்த ஒருவன் !!! 

kavithaiyum kaadhalum

kavithaiyum kaadhalum
epporul nokkinum
neeyendre amaivathin
artham ariyaamal
thavikiren naan!!!